Stock market-க்கு புதிதாக வரும்போது “எந்த stock நல்லது?”, “இந்த price-க்கு வாங்கலாமா?” என்ற கேள்விகள் பலருக்கும் வரும். இந்த கேள்விகளுக்கு ஒரு அடிப்படையான பதில் சொல்ல உதவும் எளிமையான கருவி தான் Price to Earnings Ratio (P/E Ratio).
இந்த P/E Ratio-ஐ புரிந்துகொள்ளும் முன்னே, முதலில் EPS (Earnings Per Share) என்ன என்பதைக் புரிந்துகொள்ள வேண்டும். EPS என்பது கம்பெனி ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்பதைக் காட்டும்.
EPS = Total Profit / Number of Shares
உதாரணத்திற்கு, ABC என்ற ஒரு company ₹1000 லாபம் பண்ணுகிறது, அதற்கு 100 பங்குகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்:
EPS = 1000 / 100 = ₹10
அதாவது, அந்த company ஒரு share-க்கு ₹10 சம்பாதிக்கிறது.
இப்போ இதைப் பயன்படுத்தி P/E Ratio-ஐ பார்க்கலாம்.
P/E Ratio = Price Per Share / EPS
உதாரணத்திற்கு, ஒரு company-யின் share price ₹100 என்றும், அதன் EPS ₹10 என்றும் இருந்தால்:
P/E Ratio = 100 / 10 = 10
இதன் அர்த்தம் என்னவென்றால், அந்த company சம்பாதிக்கும் profit-ஐ அடிப்படையாக வைத்து பார்த்தால், நீங்கள் அந்த share-ஐ அதன் earnings-ஐ விட 10 மடங்கு விலைக்கு வாங்குகிறீர்கள். இதன் மூலம் அந்த stock cheap-ஆ இருக்கிறதா அல்லது costly-ஆ இருக்கிறதா என்பதை ஒரு அளவிற்கு புரிந்துகொள்ளலாம்.
பொதுவாக Low P/E இருந்தால் அந்த stock undervalued ஆக இருக்கலாம் அல்லது அந்த company-க்கு growth slow ஆக இருக்கலாம். அதேபோல் High P/E இருந்தால் முதலீட்டாளர் அந்த company-யின் future growth-ஐ அதிகமாக expect பண்ணுகிறார்கள் என்பதைக் குறிக்கும்.
ஆனால், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் P/E Ratio மட்டும் பார்த்து எந்த stock-யையும் வாங்க முடிவு எடுக்கக் கூடாது. Company-யின் வளர்ச்சி, கடன் நிலை, விற்பனை வளர்ச்சி போன்ற மற்ற முக்கியமான காரணிகள்யும் சேர்த்து தான் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
முடிவாக, P/E Ratio என்பது ஒரு பங்குன் price-க்கும் அதன் actual earnings-க்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான கருவி. இதை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால், நீங்கள் stocks-ஐ விலை அடிப்படையில் இல்லாமல் value அடிப்படையில் analyze பண்ண ஆரம்பிப்பீர்கள். அதுவே ஒரு நல்ல முதலீட்டாளர் ஆக மாறும் முதல் படி.