
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக, தாமிரம் விலை 0.18% குறைந்து 878.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கின்றனர்.
உலகளவில் தாமிரத்தின் சப்ளை குறைந்திருப்பதால் விலை மேலும் கீழே விழாமல் நிலைபெற்று உள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, லண்டன் மெட்டல் எக்சேஞ்சில் (LME) தாமிரத்தின் கையிருப்பு 60% குறைந்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் வரி உயர்வுக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக, அமெரிக்கா தாமிரத்தை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது.
பெரு நாட்டில் தாமிர உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 8% அதிகரித்துள்ளது. இதனால் உலகளவில் தாமிர தேவையும் சப்ளையும் சமநிலையில்தான் உள்ளன.