முந்தைய வர்த்தக அமர்வில் அவுன்ஸுக்கு சுமார் 4,900 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை, வியாழக்கிழமை ஆசிய சந்தையில் பெரும்பாலும் நிலையாக இருந்தது.
U.S. President, கிரீன்லாந்து தொடர்பான பதட்டங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பது குறித்து முன்பு கூறிய கடும் எச்சரிக்கைகளில் இருந்து பின்வாங்கியதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீட்டு தேவை (Safe Haven Demand) குறைந்தது.
கடந்த மூன்று வர்த்தக நாட்களில், உலகளாவிய அரசியல் பதட்டங்கள் காரணமாக தங்கம் 6%க்கும் மேல் உயர்ந்து, 5,000 டாலர் என்ற முக்கிய நிலைக்கு நெருங்கியது. ஆனால் தற்போது அந்த வேகம் சற்று குறைந்துள்ளது.
Davos -ல் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில், U.S. President
கிரீன்லாந்து விவகாரத்தில் பலத்தை பயன்படுத்தப் போவதில்லை.
ஐரோப்பிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கத் திட்டமில்லை
என்று அறிவித்தார். மேலும், அமெரிக்க டாலர் மதிப்பு சிறிதளவு உயர்ந்ததும், தங்கத்தின் விலை சற்று குறைய காரணமாக இருந்தது.