Middle East-ல நிலைமை ரொம்பவே சீரியஸா இருக்கு. குவைத்தில் இருக்கிற அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா வந்திருக்கிற தகவல், ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதலை ஒரு நேரடிப் போராக (Regional War) மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கு. இதற்கிடையில் பாகிஸ்தான், இஸ்ரேலை கடுமையாக விமர்சிச்சிருக்கிறது உலக நாடுகளிடையே டிப்ளமேட்டிக் பதற்றத்தை இன்னும் அதிகரிச்சிருக்கு. இது ஒரு பெரிய போராக மாறினால், சாதாரண மக்களாகிய நமக்கு நேரடி பாதிப்புகள் இருக்கும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: crude oil வரத்து பாதிக்கப்பட்டு, விலை தாறுமாறாக ஏறும்.
பொருட்களின் விலை ஏற்றம்: போக்குவரத்து செலவு அதிகரிப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
பங்குச்சந்தை வீழ்ச்சி: முதலீடுகளில் பெரிய தடுமாற்றம் ஏற்படும்.
இந்தியர்களுக்குப் பாதிப்பு: வளைகுடா நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்தாலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதில் பெரிய ஆர்வம் காட்டாதது சூழலை இன்னும் சிக்கலாக்கியிருக்கு.