

பட்ஜெட் 2025 பற்றிய எதிர்பார்ப்புகள் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக, பழைய வருமான வரி முறையை அரசாங்கம் நீக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி முறையில், குறைந்த வரி விகிதங்களுடன் எளிமையான நடைமுறை வழங்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் மிகவும் வசதியானதாக இருந்தாலும், பழைய வரி முறையில் சில முக்கியமான சலுகைகள் உள்ளன, அவை 80C, 80D போன்ற பிரிவுகளில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும்.
பழைய வரி முறையில், வீட்டு கடன், மருத்துவ காப்பீடு, முதலீடுகள் போன்றவற்றிற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையான சலுகைகள் புதிய வரி முறையில் கிடைக்கவில்லை, இதனால் பல வரி செலுத்துவோர் பழைய முறையை இன்னும் பயன் படுத்துகின்றனர்.
இந்த நிலையில், அரசாங்கம் பழைய வரி முறையை முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் எடுப்பதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. தற்போதைய தகவல்கள் அடிப்படையில், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை, ஆனால் வருவாய்த் திட்டத்தை எவ்வாறு பரிசீலிப்பது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
“புதிய வரி விதிப்பு முறையின் மீது அரசாங்கத்தின் ஆர்வமும், அதைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பழைய ஆட்சியில் கிடைக்கும் பல்வேறு விலக்குகளின் வரம்புகள் அதிகரிக்கப்படாமல் இருப்பதையும் பார்க்கும்போது, நிதியமைச்சர் பழைய வரி முறையை முற்றிலுமாக ரத்து செய்தால் அதிர்ச்சியடைய வேண்டாம்” என்று மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் Balwant Jain கூறியுள்ளார்.
இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதும் இல்லையென்றாலும், அரசு பழைய வருமான வரி முறையை கண்டு கொள்ளாமல் , புதிய வருமான வரி முறைக்கும் கொடுக்கும் முக்கியத்துவங்கள் இதனை உறுதிபடுத்துவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.