
நீண்ட கால பொருளாதார இலக்குகளுக்கு PPF மற்றும் SIPகள் பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்யும் ஒன்றாக அமைகின்றன. வழக்கமான முறையில் சிறிய தொகைகளை முதலீடு செய்வது நாளடைவில் செல்வத்தை அதிகரிப்பதற்கு உதவும். அப்படி முதலீடு செய்வதற்கு நமக்கு மார்க்கெட்டில் ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் நீண்ட கால பொருளாதார இலக்குகளுக்கு PPF மற்றும் SIPகள் பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்யும் ஒன்றாக அமைகின்றன.
ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயை Public Provident Fund மற்றும் Systematic Investment Plan மூலமாக Mutual Fund -ல் முதலீடு செய்து ஒரு குறிப்பிடத்தக்க அளவு செல்வத்தை உங்களால் சேமிக்க முடியும். இந்த இரண்டுமே நீண்ட கால சேமிப்பு திட்டங்களாக இருந்தாலும், இவை மூலமாகப் பெறும் Return -கள், கால அளவு, அமைப்பு போன்றவை மாறுபடும். எனவே, ஒருவர் இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்.
PPF என்றால் என்ன?
Public Provident Fund (PPF) என்பது அரசு ஆதரவு பெற்று வரும் 15 வருட lock-in period கொண்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலமாகப் பெறும் Return -களுக்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. 15 வருட காலம் முடிந்த பிறகு விருப்பமிருந்தால் உங்களுடைய முதலீட்டை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
SIP என்றால் என்ன?
Systematic Investment Plan (SIP) என்பது வழக்கமான முறையில், அதாவது இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாதமும் Mutual Fund -களில் முதலீடு செய்வதற்கான ஒரு வழி. இதில் உங்களுக்குக் கிடைக்கும் Return என்பது சந்தை செயல்திறனைப் பொறுத்து அமையும். ஆனால், வரலாற்று ரீதியாக பார்க்கும்போது SIP-கள் ஒரு ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. SIP-களைப் பொறுத்தவரை இதற்கு எந்தவொரு lock-in period -ம் கிடையாது. ஆனால், SIP மூலமாக வரும் Return -களுக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
PPF vs SIP: ஒப்பீடு
Public Provident Fund:
Return : 7.1%
அபாய அளவு: மிகக் குறைவு; அரசு ஆதரவு பெற்றுள்ளது
முதிர்வு காலம்: 15 வருடங்கள்
வரி பலன்கள்: வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80C-இல் 1.5 லட்சம் ரூபாய் வரை கிளைம் செய்யலாம். ரிட்டன்களுக்கு வரி கிடையாது.
ரொக்க நிலை: குறைந்தது 7 வருடங்களுக்குப் பிறகு பாதி அளவு பணத்தை வித்ட்ரா செய்வதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
Systematic Investment Plan (SIP):
Return -கள்: சந்தையுடன் தொடர்புடையது; நீண்ட காலத்திற்கு சராசரியாக ஒரு ஆண்டுக்கு 10% முதல் 12%.
அபாய அளவு: மிதமானது முதல் அதிக அளவு வரை; சந்தையின் செயல்திறனைப் பொறுத்தது.
முதிர்வு காலம்: கிடையாது (ELSS தவிர, இதற்கு 3 வருட பூட்டுக்காலம் உள்ளது) வரி பலன்கள்: பிரிவு 80C பலனானது ELSS திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ரொக்க நிலை: அதிகம்; எந்த நேரத்திலும் உங்களுடைய முதலீடுகளை பணமாக்கிக்கொள்ளலாம் (ELSS தவிர).
PPF திட்டத்தை எப்போது தேர்வு செய்ய வேண்டும்?
Risk எடுக்க விரும்பாத உறுதியளிக்கப்பட்ட Return -களை பெற நினைப்பவர்கள்.
நீண்டகால ஓய்வு நிதியை உருவாக்குவதற்கு.
வரி இல்லாத ரிட்டன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
15 வருட முதிர்வு காலம் பரவாயில்லை என்பவர்கள்.
PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயை நீங்கள் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். எனவே, 15 வருடங்கள் கழித்து, 7.1% வட்டிக்கு 16.25 லட்சம் ரூபாயை சேமித்திருப்பீர்கள்.
SIP எப்போது சிறந்த சாய்ஸாக அமையும்?
சந்தை ஏற்ற இறக்கங்களை என்னால் சமாளிக்க முடியும் என்பவர்கள்.
அதிக Return -களை எதிர்பார்ப்பவர்கள்.
நெகிழ்வுத் தன்மை மற்றும் ரொக்க நிலையை விரும்பும் நபர்கள்.
வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி அல்லது செல்வ சேமிப்பு போன்ற இலக்குகளுக்காக முதலீடு செய்பவர்கள்.
ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் 10% முதல் 12% என்ற ஆண்டுவாரியான ரிட்டன் மூலமாக 15 வருடங்களில் உங்களுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்கும்.
இரண்டு திட்டங்களையும் இணைத்து பயன்படுத்தலாமா?
நீண்ட கால வளர்ச்சிக்கு 3,000 ரூபாயை SIP திட்டத்திலும், வரி இல்லாத ரிட்டன்கள் மற்றும் உறுதியளிக்கப்பட்ட Return -களுக்கு 2,000 ரூபாயை PPF திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.
எனவே, Risk எடுக்க விரும்பும் உங்களுடைய மனப்பான்மை, பொருளாதார இலக்குகள் போன்றவற்றின் அடிப்படையில் PPF மற்றும் SIP ஆகிய இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.