பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் முதலீட்டை தொடங்கும் விஷயத்தில், “இப்போ வருமானம் குறைவு… இன்னும் சில வருடங்கள் கழித்து நல்ல சம்பளம் வந்த பிறகு பெரிய தொகையாக முதலீடு பண்ணலாம்” என்று நினைத்து தாமதப்படுத்துகிறார்கள்.
ஆனால் முதலீட்டு உலகில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பெரிய தொகை முதலீடு செய்வதை விட, சீக்கிரமாக முதலீட்டை தொடங்குவது அதிக பலன் தரும்.
இன்று ஒரு குழந்தை பிறக்கும்போது, 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் உயர்கல்விக்கான செலவு பல மடங்கு உயர்ந்திருக்கலாம். தற்போது ₹10 லட்சம் செலவாகும் ஒரு கல்வி, வருடத்திற்கு சராசரியாக 8% கல்வி பணவீக்கம் (Education Inflation) இருந்தால், 18 ஆண்டுகளில் ₹40 லட்சத்திற்கும் மேல் ஆகலாம். இதுபோன்ற பெரிய இலக்குகளை அடைய, முதலீட்டை தாமதிக்காமல் தொடங்குவது மிகவும் அவசியம்.
உதாரணமாக, குழந்தை பிறந்த உடனே மாதம் ₹3,000 SIP தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வருடத்திற்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், 18 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகையை விட பல மடங்கு அதிகமான Corpus உருவாக வாய்ப்பு உள்ளது. இதுவே Compounding எனப்படும் அற்புதம். உங்கள் பணம் மட்டுமல்ல, அந்த பணம் ஈட்டும் லாபமும் மீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கும்.
மாறாக, அதே இலக்கிற்காக குழந்தைக்கு 10 வயது ஆன பிறகுதான் முதலீட்டை தொடங்கினால், மீதமுள்ள காலம் குறைவாக இருப்பதால், அதே Corpus-ஐ உருவாக்க மாதம் ₹3,000 அல்ல, ₹8,000 அல்லது ₹10,000 முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். அதாவது, நீங்கள் இழப்பது பணத்தை அல்ல; Compounding-க்கு கிடைக்க வேண்டிய மதிப்புமிக்க நேரத்தை.
மேலும், ஆரம்பத்திலேயே SIP தொடங்குவதால் சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நீண்டகால முதலீட்டில் Market Volatility-யின் தாக்கம் குறைந்து, Wealth Creation-க்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அதனால், சந்தை இன்று உயர்ந்ததா, குறைந்ததா என்பதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.
குழந்தையின் எதிர்காலத்திற்கான திட்டமிடலில் ஒரு முக்கியமான தவறு என்னவென்றால், பலர் சேமிப்பை மட்டும் கவனிக்கிறார்கள்; ஆனால் பணவீக்கத்தை (Inflation) கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்று போதுமானதாக தோன்றும் தொகை, 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இருக்காமல் போகலாம். அதனால்தான் Inflation-ஐ மிஞ்சும் வளர்ச்சி தரக்கூடிய முதலீட்டு கருவிகளை பயன்படுத்துவது முக்கியம்.
எனவே, உங்கள் குழந்தையின் உயர்கல்வி, வெளிநாட்டு படிப்பு, திருமணம் அல்லது பிற பெரிய கனவுகளுக்காக திட்டமிடுகிறீர்களானால், “பெரிய தொகை கிடைத்த பிறகு முதலீடு செய்வேன்” என்று காத்திருக்காமல், சிறிய தொகையிலாவது SIP-ஐ இன்றே தொடங்குங்கள். ஏனெனில் முதலீட்டில் Amount is important, but Time is priceless.
“குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க பெரிய தொகை தேவையில்லை; சரியான நேரத்தில் தொடங்கும் பழக்கம் போதும்.”