West Asia பகுதியில் நடந்த conflict காரணமாக ஏற்பட்ட விநியோகத் தடையால் இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஆரம்ப அறிகுறிகளை காட்டுகிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதும் (Exports), அங்கிருந்து கொண்டு வருவதும் (Imports) குறைந்தால், துறைமுகங்களில் வேலை குறையும். போர் காரணமாக கடல் வழிப் பாதைகளில் ஆபத்து அதிகரித்துள்ளதால், கப்பல் போக்குவரத்து செலவு ஏறியுள்ளது. இதனால் வர்த்தகம் மந்தமடைந்து சரக்கு வரத்து குறைந்துள்ளது.
விமான போக்குவரத்து business meetings மற்றும் சுற்றுலாவுக்காக மக்கள் பயணம் செய்வது குறைந்திருக்கிறது. 2025 ஆகஸ்ட் மாதத்தில் இது வெறும் 0.3% மட்டுமே வளர்ச்சியை எட்டியிருந்தது. இது மக்களின் செலவு செய்யும் திறன் மற்றும் நிறுவனங்களின் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வை காட்டுகிறது. 2026 மார்ச் மாதத்தில் Manufacturing PMI கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு 53.8 ஆகக் குறைந்தது.
2026 மார்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 4.0% சரிவைக் கண்டது. மின்சார உற்பத்தி வெறும் 0.5% மட்டுமே வளர்ந்தது. நிலக்கரி மற்றும் மின்சாரத் தேவை குறைந்தால், தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் முழுமையாக இயங்காது. crude oil (-5.2%) மற்றும் natural gas (-5.0%) உற்பத்தியும் சரிந்துள்ளன, இது energy sector-ல் ஏற்பட்டுள்ள மந்தநிலையை உறுதிப்படுத்துகிறது.
Overall ஆக பார்த்தால், பொருளாதாரம் இன்னும் நிலைத்திருந்தாலும், war, supply issues மற்றும் inflation காரணமாக மந்தநிலை தொடங்கியுள்ளது என்று RBI எச்சரிக்கிறது.