
2024-ல் Nifty அதிகபட்சமாக 20% வரை உயர்ந்து, தற்போது அதன் All Time High-ல் இருந்து கிட்டத்தட்ட 10% வரை கீழிறங்கி முடிந்துள்ளது. ஆக, இந்த வருடத்தில் நிஃப்டியின் வளர்ச்சி 9%. இதுவே 2023-ல் நிஃப்டியின் வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2025-ல் நிஃப்டியின் வளர்ச்சி, முதலீட்டு முதலீட்டு வாய்ப்புகள், கவனிக்க வேண்டிய துறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் நிஃப்டி அதன் வரலாற்று உச்சமான 26,277- ஐ தொட்டது. 2023-ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய காளையின் ஓட்டம் சிறுசிறு சரிவைக் கண்டாலும், செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து மேலே சென்று கொண்டு தான் இருந்தது. அதன் பிறகு தற்போது தான், ஒரு நல்ல correction- ஐ (-10%) சந்தித்துள்ளது. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் காளை இவ்வாறு இளைப்பாரி ஓய்வெடுப்பது நல்லது தான். ஏனெனில் அப்போதுதான் சரியான மதிப்பீட்டில் உள்ள பங்குகளை முதலீட்டிற்கு அடையாளம் காண முடியும்.
பெரும்பாலான நிறுவனங்களில் கடந்த காலாண்டு முடிவுகள் mixed- ஆக இருந்தது, Mid and Small நிறுவனங்களின் அபரிவிதமான வளர்ச்சி, சில குறிப்பிட்ட துறைகளின் அதீத வளர்ச்சி (Defence, PSU), Micro and Macro economic சூழ்நிலைகள் என பல்வேறு காரணங்களால் சந்தை தற்போது ஒருவித மந்த நிலையில் உள்ளது.
Positive View:
2025 பிப்ரவரி மாதம் வரும் பட்ஜெட் தாக்கல், பண்டிகை காலங்களை கடந்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்களின் வரும் காலாண்டு முடிவுகள் நல்ல Result-ஐ கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி Repo Rate-ஐ குறைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இவையனைத்தும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுவதால், பிப்ரவரி மாதத்திற்கு பிறகு சந்தை மெதுவாக உயர்ந்து அதன் பழைய உச்சநிலையை அடையலாம். அதாவது அடுத்த வருடத்தில் நிஃப்டி அதன் தற்போதைய Low-ல் இருந்து 10-15% வளர்ச்சியை (27,000 புள்ளிகள்) அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Negative View:
ஒருவேளை பட்ஜெட்டில் எதிர்பாராத அம்சங்கள், நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் பிற சூழ்நிலைகள் காரணமாக சந்தை கீழே இறங்கினால் மேலும் 10% கீழே இறங்கலாம். அதாவது 21,000 வரை வரலாம். ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவே.
காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் Mid and Small cap பங்குகளின் வளர்ச்சியை ஒப்பிடும்போது Large Cap பங்குகளின் வளர்ச்சி குறைவுதான். எனவே, வரும் வருடத்தில் Large Cap பங்குகள் நல்ல வளர்ச்சியை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் Nifty மேலே செல்லவே வாய்ப்பு அதிகம்.
பங்கு முதலீட்டில், தற்போது Mid and Small cap பங்குகளை விட Large Cap பங்குகள் ஓரளவு நல்ல மதிப்பீட்டில் உள்ளன. US Fed rate cut, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி போன்றவை IT மற்றும் பார்மா துறைக்கு சாதகமாக பார்க்கப்படுவதால் அந்த துறை சார்ந்த பங்குகளை கவனத்தில் கொள்ளலாம். மேலும் இந்திய அரசு Infrastructure-க்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் Infra துறையையும் கவனத்தில் கொள்ளலாம். முக்கியமாக எந்த பங்கை வாங்கினாலும் சரியான மதிப்பில் வாங்குவதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Mutual Fund-ல் புதிதாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் Large Cap Fund or Index Funds, Large and Midcap Funds, Flexi or Multi Cap Funds போன்றவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
மேற்கூறியவை அனைத்தும் சந்தையை பற்றிய எங்களது பார்வை மட்டுமே. இவ்வாறு நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! ஏனெனில் சந்தையை யாராலும் 100% கணிக்க முடியாது. எனவே முதலீடு செய்வதற்கு முன் நன்றாக ஆராய்ந்த பிறகு அல்லது உங்களது நிதி ஆலோசகரிடம் ஆலோசித்து விட்டு முதலீடு செய்யுங்கள்.
மேலும் 2025-ல் சந்தை பற்றிய உங்களது பார்வையை கமெண்ட்டில் கூறுங்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!