
இந்தியாவில் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் sip எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் நடைமுறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டிலேயே அதிக லாபம் காண முடியும் எனக் கூறுகின்றனர். எனவே தான் சிறு வயதிலிருந்தே முதலீட்டு பயணத்தை தொடங்கி விட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
நீண்டகால அளவில் நாம் முதலீடு செய்யும்போதுதான் காம்பௌண்டிங் முறையில் நமக்கு குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைக்கும் . அப்படி மாதம் தோறும் 500 ரூபாயை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும், மாதந்தோறும் 1000 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீண்டகால அளவில் நாம் முதலீடு செய்யும்போதுதான் காம்பௌண்டிங் முறையில் நமக்கு குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைக்கும் . அப்படி மாதம் தோறும் 500 ரூபாயை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும், மாதந்தோறும் 1000 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.500 முதலீடு 30 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 30 ஆண்டுகளுக்கு அதாவது 360 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 1.8 லட்சம் ரூபாய் தான், ஆனால் 30 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 15.85 லட்சம் என மொத்தமாக 17.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.1000 முதலீடு 20 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 20 ஆண்டுகளுக்கு அதாவது 240 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 2.4 லட்சம் ரூபாய் தான், ஆனால் 20 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 7.59 லட்சம் என மொத்தமாக 9.99 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.5000 முதலீடு 10 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 10 ஆண்டுகளுக்கு அதாவது 120 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 6 லட்சம் ரூபாய் ஆனால் 10 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 5.62 லட்சம் என மொத்தமாக 11.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.10,000 முதலீடு 5 ஆண்டு காலம்: 5 ஆண்டுகளுக்கு அதாவது 60 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 6 லட்சம் ரூபாய், ஆனால் 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 2.25 லட்சம் மட்டுமே, மொத்தமாக உங்களுக்கு 8.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதனை ஆய்வு செய்கையில் நமக்கு முக்கியமாக தகவல் கிடைக்கிறது. குறைந்த தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது காம்பவுண்டிங் என்ற மேஜிக் மூலம் உங்கள் பணம் பலமடங்கு உயர்கிறது. அதுவே குறுகிய காலத்திற்கு நீங்கள் பெரிய தொகை முதலீடு செய்தாலும் குறைந்தபட்ச பணமே கிடைக்கிறது. எனவே முதலீடு என வரும் போது இளம் வயதிலேயே தொடங்கி நீண்ட காலத்திற்கு அதனை தொடர்ந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.