
நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் மருத்துவ காப்பீடு மிகவும் முக்கியம். மருத்துவ காப்பீடு என்றால், அது இளம் வயதினருக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் முக்கியம். வயதான காலத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், போதிய மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்.
இந்தியாவில் பலரும் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெற்றுக் கொள்வதில் சவால்களை எதிர்கொள்கிறார்கள், இதனால் மருத்துவ செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். வயதுக்கு ஏற்ப பாலிசி பிரிமியம் அதிகரிப்பதும் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும். இதன் பிரிமியம் தொகையை குறைப்பதற்கான சில வழிகள்:
ஆரம்ப காப்பீடு:
மருத்துவ காப்பீடு பாலிசியை ஆரம்பத்தில் எடுக்கும் போது, அது குறைந்த பிரிமியத்தில் கிடைக்கும். 60 வயதில் பாலிசி எடுப்பதைவிட, 30 அல்லது 40 வயதுகளில் பாலிசி எடுப்பது, பிரிமியத்தை குறைக்க உதவும். பாலிசியை தொடர்ந்து பராமரிக்கையில் பல போனஸ்கள் கிடைக்கும்.
கூடுதல் பலன்:
நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளிக்கும். அதேபோல், பிரிமியம் தொகையை ஆண்டு அடிப்படையில் செலுத்துவதன் மூலம் அல்லது மூன்றாண்டு பாலிசி எடுப்பதன் மூலம், பிரிமியத்தை குறைக்க முடியும்.
குடும்ப திட்டம்:
வயதானவர்கள் குடும்பத்திற்கான பிளோட்டர் பாலிசி எடுப்பதையும் பரிசீலிக்கலாம். ஒரு பாலிசி மூலம் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்அதன் மூலம், இளையவர்களுடன் பொறுப்பை பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இதர அம்சங்கள்:
வயதானவர்கள் முன்னதாக ஒரு பெரும் தொகையை செலுத்துவதன் மூலம், பிரிமியத்தை குறைக்க முடியும். காப்பீடு துவங்குவதற்கு முன் செலுத்தப்படும் தொகை, பிடித்தமாக கருதப்படுகிறது. மேலும், மருத்துவ செலவின் ஒரு பகுதியை இணைந்து செலுத்தும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம்.
பரிசோதனை சலுகைகள்:
“வரும் முன் காப்போம்” வகையிலான சேவைகளை நாடலாம். ஆண்டுதோறும் பரிசோதனை அல்லது உடல்நலதன்மைத் திட்டங்கள் மூலம் ஆரோக்கியத்தை உறுதி செய்வதுடன், சலுகைகளையும் பெறலாம். அடிப்படை பாலிசி எடுத்து, தேவையான டாப்-அப் பாலிசிகளையும் சேர்த்து பெற முடியும்.
இந்த வழிகளின் மூலம், வயதானவர்களுக்கு சரியான மருத்துவ காப்பீடு பெற்று, அவர்கள் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.