Central Govt கொடுத்த லேட்டஸ்ட் Update படி, இந்தியாவோட Crude oil, பெட்ரோல் மற்றும் டீசல் Stock இப்போதைக்கு “Comfortable”-ஆ இருக்கு. பெட்ரோலிய அமைச்சகம் என்ன சொல்லுதுன்னா, பெட்ரோல் பங்க்-கள்ல எந்தத் தட்டுப்பாடும் இல்லாம Normal -அ sales நடக்குது, அதனால மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனா, சமையல் எரிவாயு (LPG) சப்ளை மட்டும் இன்னும் கொஞ்சம் “Tight”-ஆ இருக்கு. இதைச் சரி பண்ண Govt பல steps எடுத்துட்டு இருக்காங்க. குறிப்பா, மார்ச் 5-ம் தேதியில இருந்து இந்தியாவோட LPG உற்பத்தி 36% அதிகரிச்சு, இப்போ ஒரு நாளைக்கு 50,803 டன்னா உயர்ந்திருக்கு. அதுமட்டும் இல்லாம, வெளிநாடுகள்ல இருந்து LPG எடுத்துட்டு ‘Shivalik’ மற்றும் ‘Nanda Devi’ போன்ற கப்பல்கள் முந்த்ரா போர்ட்டுக்கு (Mundra Port) வந்துட்டு இருக்கு. அதனால மக்கள் சிலிண்டர் கிடைக்காதுன்னு பயந்து தேவையில்லாம Panic booking பண்ண வேண்டாம்னு கேட்டுருக்காங்க. அதே மாதிரி பதுக்கல் பண்றவங்க மேல State Govt கடுமையான நடவடிக்கை எடுத்துட்டு வராங்க. இப்போதைக்கு நிலைமை கொஞ்சம் டைட்டா இருந்தாலும், சீக்கிரமே LPG சப்ளை Normal ஆகிடும் அப்டினு எதிர்பார்க்கப்படுது.