இன்றைய காலத்தில் Financial planning மிகவும் முக்கியமானதாகி விட்டது. சம்பாதிப்பது மட்டும் போதாது, எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காகவே “Emergency Fund” அல்லது அவசர நிதி என்பது மிகவும் அவசியமானது. ஆனால் இது ஒரு முதலீடு இல்லை; இது ஒரு பாதுகாப்பு நிதி ஆகும். வேலை இழப்பு, திடீர் மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளுக்காக இந்த நிதி பயன்படும்.
ஒரு மனிதன் குறைந்தது 6 மாதங்களுக்கான செலவினத்தை emergency fund ஆக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முக்கிய காரணம், வேலை இழந்தால் அல்லது வருமானம் தடைப்பட்டால் உடனடியாக புதிய வேலை கிடைக்க சில மாதங்கள் ஆகலாம். அந்த காலத்தில் எந்த financial stress இல்லாமல் வாழ்க்கையை நடத்த இந்த நிதி உதவும். மேலும், emergency நேரங்களில் கடன் வாங்குவது அல்லது credit card பயன்படுத்துவது போன்ற கடன் சுமையை தவிர்க்கவும் இது உதவும்.
சிலர் 3 மாத செலவு போதும் என்று நினைப்பார்கள். ஆனால், இன்றைய காலத்தில் job market மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது, மருத்துவ செலவுகள் அதிகமாகி வருகின்றன, குடும்ப பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. அதனால் safe side-ஆ 6 மாத செலவை வைத்திருக்க வேண்டும் என்பது சிறந்த நடைமுறையாக கருதப்படுகிறது.
இந்த emergency fund-ஐ உருவாக்குவது கடினமான விஷயம் இல்லை. மாதம் உங்கள் வருமானத்தில் இருந்து 10% முதல் 20% வரை சேமித்து, அதை தனியான savings account, fixed deposit-ல் வைத்திருக்கலாம். இதை ஒரே நாளில் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், இந்த நிதியை investment-க்கு பயன்படுத்துவது அல்லது stock market-ல் போடுவது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் unexpected situation வரலாம். அந்த நேரத்தில் financial-ஆக strong-ஆ இருக்க இந்த நிதி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். எனவே, இன்று முதல் சிறிய தொகையிலேயே ஆரம்பித்தாலும், அது நாளை ஒரு பெரிய பாதுகாப்பாக மாறும்.