“15-15-15 rule”ன்னு ஒரு simple formula அதிகம் பேசப்படுகிறது. அதாவது, மாதம் ₹15,000 invest பண்ணி, அதை 15 years தொடர்ந்து maintain பண்ணி, வருடத்திற்கு average -ஆ 15% return கிடைத்தா, சுமார் ₹1 கோடி corpus உருவாக்க முடியும்.
ஆனா, இந்த calculation 100% guaranteed இல்லன்னு புரிஞ்சிக்கணும். கடந்த காலத்தில் சில mid-cap, small-cap, large & mid-cap, flexi-cap funds 15% அல்லது அதற்கு மேல் CAGR கொடுத்திருக்காங்க. But, இந்த returns ஒவ்வொரு yearமும் same -ஆ இருக்காது. சில வருடங்களில் 20%க்கும் மேல கிடைக்கலாம், அதே நேரத்தில் சில வருடங்களில் return குறையலாம் அல்லது negativeஆ கூட இருக்கலாம்.
So, 15-15-15 rule என்பது ஒரு guarantee இல்ல — இது just historical average அடிப்படையிலான estimate தான். இந்த strategy -ல success ஆகணும்னா patience, discipline, especially market down ஆனாலும் SIP continue பண்ணும் mindset ரொம்ப முக்கியம்.
பல investors பண்ணுற பெரிய mistake என்னனா, market crash ஆனவுடன் SIP stop பண்ணுறது அல்லது investment withdraw பண்ணுறது. இதனால் long-term goal பாதிக்கப்படும். Actually, market down -ஆ இருக்கும் time -ல தான் SIPக்கு advantage, அப்போது units அதிகமா கிடைக்கும், இது long-term -ல better returns கொடுக்க help பண்ணும்.