நீங்கள் தினமும் வேலைக்கு போகிறீர்கள். உங்களுடைய நேரத்தையும் திறமையையும் கொடுத்து சம்பளம் வாங்குகிறீர்கள். இதுதான் Active Income. அதாவது, நீங்கள் வேலை செய்தால் மட்டுமே பணம் வரும். வேலை நிறுத்தினால் வருமானமும் நிற்கும். உதாரணமாக, மாத சம்பளம், Freelancing Income, Consulting Fees, Business-ல் நீங்கள் நேரடியாக உழைத்து சம்பாதிக்கும் லாபம் போன்றவை Active Income ஆகும்.
ஆனால், பணக்காரர்கள்(Rich People) வெறும் Active Income-ஐ மட்டுமே நம்புவதில்லை. அவர்கள் Passive Income உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். Passive Income என்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் வேலை செய்யாமல் இருந்தாலும் பணம் தொடர்ந்து வருவது. உதாரணமாக, வாடகை வருமானம், Dividend Income, Mutual Fund SWP, Bonds Interest, Online Courses அல்லது Digital Products மூலம் வரும் வருமானம் ஆகியவை Passive Income-க்கு உதாரணங்கள்.
ஒரு முக்கியமான உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் Passive Income கூட Active Effort தேவைப்படும். உதாரணமாக, ஒரு வீடு வாங்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் அல்லது ஒரு Digital Product உருவாக்க வேண்டும். ஆனால் ஒருமுறை அந்த அமைப்பு உருவாகிவிட்டால், அது நீண்ட காலத்திற்கு வருமானத்தை உருவாக்கும்.
பலர் “எனக்கு Passive Income வேண்டும்” என்று நினைக்கிறார்கள். ஆனால் Passive Income உருவாகும் விதை Active Income-லிருந்துதான் வருகிறது. முதலில் சம்பாதிக்க வேண்டும், பிறகு சேமிக்க வேண்டும், அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் Passive Income உருவாகும்.
Financial Freedom என்பது அதிக சம்பளம் வாங்குவதால் மட்டும் வராது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போதும் பணம் சம்பாதிக்கும் Assets உருவாக்கும்போதுதான் உண்மையான Financial Freedom கிடைக்கும்.
அதனால் கேள்வி என்னவென்றால், நீங்கள் இன்னும் உங்கள் நேரத்தை பணத்திற்காக வேலை செய்யது கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைக்கிறீர்களா?
இன்றே உங்கள் Active Income-ல் இருந்து ஒரு பகுதியை முதலீடு செய்து, நாளைய Passive Income-ஐ உருவாக்க தொடங்குங்கள்.