மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் Brent crude oil விலை ஒரு barrel -க்கு $109.75 வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கியமான South Pars எரிவாயு வளத்தை தாக்கியதாக கூறப்படுவதால், அதற்கு பதிலடி கொடுக்க ஈரான் ஆசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள எரிசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவோம் என்று எச்சரித்துள்ளது.
மேலும், உலகின் முக்கியமான Oil வழித்தடமான Hormuz நீரிணை (Strait of Hormuz) பாதிக்கப்படலாம் என்ற கவலைவும் அதிகரித்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக Oil உலகளவில் பெரிய அளவில் ஏற்றுமதி நடைபெறுவதால், அங்கு ஏற்படும் எந்த தடையும் உலக பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலைகளும் உயர்ந்துள்ளன. Saudi Arabia, UAE போன்ற நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தொடர்ச்சியான பதற்றம் காரணமாக, உலகளவில் global energy market இன்னும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.