IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?
IT stocks சமீபத்தில் கடுமையாக சரிந்துள்ள நிலையில், Nifty IT Index 4%க்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. Infosys, HCL Technologies, Tata Consultancy Services, Tech Mahindra மற்றும் Wipro போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் 1.5% முதல் 4%க்கும் மேல் வரை குறைந்துள்ளன. இது ஒரு நாள் நிகழ்வு அல்ல; இந்த ஆண்டு மட்டும் பார்த்தாலும் IT பங்குகள் சுமார் 19% வரை வீழ்ச்சி கண்டுள்ளன.
இந்த சரிவிற்கு பல காரணங்கள் உள்ளன:
- IT நிறுவனங்களின் earnings எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.
- clients (வெளிநாட்டு நிறுவனங்கள்) செலவுகளை குறைத்துள்ளனர்.
- புதிய deals குறைவாக வருகிறது
- மேலும், global level-ல economic uncertainty இருந்ததால் demand பாதிக்கப்பட்டுள்ளது.
AI deals கிடைத்தாலும், Traditional IT services-ல pricing pressure அதிகரித்து, “revenue deflation” நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், valuations இப்போது குறைந்து attractive ஆகியிருந்தாலும் near-term uncertainty இன்னும் நீடிக்கிறது. அதனால் lump sum முதலீட்டை தவிர்த்து SIP அல்லது STP மூலம் gradualஆக invest செய்யவும், short-term volatility இருந்தாலும் long-term growth குறிப்பாக AI adoption மூலம், இன்னும் positive ஆகவே உள்ளது.