சமீபத்தில் “EPF claim rejection” என்ற தேடல் Google Trends-ல் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் PF பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது claim reject ஆகும் பிரச்சனை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலும் இது சின்ன சின்ன தவறுகளால் தான் நடக்கிறது.
- Check Your KYC: முதல்ல உங்க UAN ஆக்டிவா இருக்கான்னு பாருங்க. ஆதார் கார்டும், UAN-ம் லிங்க் ஆகியிருக்கணும். முக்கியமா உங்க பேரு, பிறந்த தேதி எல்லாம் ஆதார்லயும் PF-லயும் ஒரே மாதிரி இருக்கணும். சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா கூட ரிஜெக்ட் பண்ணிடுவாங்க.
- Bank Details : உங்க bank account number, IFSC code எல்லாம் சரியா update ஆகிருக்கான்னு பாருங்க. 5 வருஷத்துக்கு முன்னாடியே காசு எடுக்குறீங்கன்னா, கண்டிப்பா PAN கார்டை link பண்ணிடுங்க. இல்லன்னா TDS அதிகமா பிடிப்பாங்க.
- Clear Scan of Passbook: online -ல அப்ளை பண்ணும்போது bank passbook அல்லது Cheque leaf upload பண்ணுவீங்க இல்ல? அதுல உங்க name, account number எல்லாம் ‘பளிச்’னு தெரியணும். மங்கலா இருந்தா உடனே ரிஜெக்ட் ஆகிடும்.
- Employer Approval: நீங்க update பண்ற KYC details – அ உங்க கம்பெனி (Employer) அப்ரூவ் பண்ணிருக்கணும். அவங்க சைடுல பெண்டிங் இருந்தா claim process ஆகாது.
- Consolidate Old PF Accounts: நீங்க முன்னாடி வேற கம்பெனில வேலை பார்த்திருந்தா, அந்த பழைய PF காசை இப்ப இருக்குற account- க்கு மாத்திடுங்க (Merge). அப்படி பண்ணலைன்னா service gap இருக்குன்னு சொல்லி reject பண்ண வாய்ப்பு இருக்கு.
- Check the Reason: ஒருவேளை reject ஆகிடுச்சுன்னா, பதட்டப்படாம EPFO portal -ல போயிட்டு “Know Your Claim Status”-ல என்ன reason -னு பாருங்க. அவங்களே தெளிவா சொல்லிருப்பாங்க.
- Correct the Error and Resubmit: என்ன தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறம், அதை சரி பண்ணிட்டு மறுபடியும் அப்ளை பண்ணுங்க. கண்டிப்பா காசு வந்துடும்!