பல பேரு market down ஆனா பயந்து SIP stop பண்ணிடுறாங்க. ஆனா அதுதான் biggest mistake அந்த timeல தான் குறைவான விலையில் units கிடைக்கும். அதே மாதிரி, SIP start பண்ணிட்டு amount increase பண்ணாம இருப்பதும் problem. உங்கள் income உயர்ற மாதிரி SIPயும் வருடம் தோறும் increase பண்ணினா தான் நல்ல corpus build ஆகும்.
இன்னொரு common mistake recent top performing funds மட்டும் choose பண்ணுறது. Market எப்போதும் cycleல தான் இருக்கும். அதனால் long-term consistency, fund quality முக்கியம். அதே நேரம் Retirement, house, kids future மாதிரி clear target வைச்சு invest பண்ணுங்க.
பல funds ஒரே மாதிரி stocksல invest பண்ணும் காரணத்தால் diversification benefit கிடைக்காது, அதனால் 5 முதல் 10 நல்ல funds அதாவது equity, debt, gold போன்ற asset classesல balanceஆ invest பண்ணினால் risk குறையும் மற்றும் stability கிடைக்கும்.அது மட்டும் இல்லாம வருடத்துக்கு ஒரு முறை உங்க funds performance review பண்ணி, தொடர்ந்து underperform பண்ணும் funds இருந்தால் அவற்றை மாற்றுவது முக்கியம். இப்படிச் disciplinedஆ approach எடுத்தால் தான் long-termல நல்ல returns கிடைக்கும்.
Market சில நேரங்களில் கீழே போகும் (correction). அந்த நேரத்தில் உங்க SIP returns negative (red) ஆக இருக்கலாம். இதைப் பார்த்து பல பேர் பயந்து investments sell பண்ணிடுறாங்க. ஆனா problem என்னனா நீங்க lossல sell பண்ணுறீங்க. அதனால calmஆ இருக்கணும், long-termல wait பண்ணினா தான் profit கிடைக்கும்.