கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18), Strait of Hormuz – ஐ கடக்க முயன்ற Sanmar Herald உள்ளிட்ட இரண்டு இந்தியக் கொடி ஏந்திய oil tankers மீது ஈரானிய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது இந்திய வர்த்தக கப்பல்களின் பயணத்திற்கும், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த Hormuz கடற்பாதை, இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு மிகவும் முக்கியமானது. மேற்கு ஆசிய பிரச்சனைக்கு முன்பு தினமும் சுமார் 25–27 barrels of oil இந்த வழியாக சென்றது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தாக்குதல்களின் காரணமாக, இந்த பாதையில் மீண்டும் அதிகமான uncertainty உருவாகியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக சரக்கு போக்குவரத்து தாமதம், அதிக செலவு, மேலும் காப்பீட்டு (insurance) கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகள் உருவாகும். சில கப்பல்கள் வேறு வழிகளில் செல்ல வேண்டிய சூழலும் உருவாகலாம்; இதனால் பயண நேரமும் செலவும் அதிகரிக்கும். இந்த தாக்குதல்கள் global trade -யும், குறிப்பாக oil மற்றும் natural gas விநியோகத்தையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக சர்வதேச சந்தைகளில் oil prices உயர வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையை இந்தியா கவனமாக கண்காணித்து வருகிறது. இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த தாக்குதல் geopolitical tension-ஐ மேலும் அதிகரித்து, Hormuz கடற்பாதையை மிகவும் அபாயகரமான மற்றும் நிச்சயமற்றதாக மாற்றியுள்ளது.