- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
இந்தத் திட்டம் குறிப்பாக ஓய்வுபெற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 8.2% வட்டி வழங்கும் இது, நிலையான வருமானம் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஏற்றதாகும். குறைந்தபட்சமாக ₹1,000 முதலீடு செய்யலாம், மேலும் அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.
- செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana)
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், 8.2% வரை உயர்ந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. கணக்கை தொடங்கிய பின் 21 ஆண்டுகள் காலம் இருக்கும் இந்தத் திட்டத்தில், முதல் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்தலாம். வருடத்திற்கு குறைந்தபட்சம் ₹250 முதல் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முக்கியமாக, இந்தத் திட்டம் முழுமையான வரிவிலக்கு (EEE) நன்மையை வழங்குகிறது.
- RBI மிதக்கும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள்
பாதுகாப்பான முதலீட்டுடன், வட்டி விகிதம் சந்தை நிலைக்கு ஏற்ப மாறக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்தப் பத்திரங்கள் இருக்கின்றன. தற்போது சுமார் 8.05% வட்டி வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகள் காலம் கொண்ட இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது. இது FD-களை விட அதிக வருமானம் தரும்.
- தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC)
இந்தத் திட்டம் பாதுகாப்புடன் கூடிய நடுத்தர கால முதலீட்டுக்கு ஏற்றது. வருடத்திற்கு சுமார் 7.7% கூட்டு வட்டி வழங்கும் இது, 5 ஆண்டுகள் காலம் கொண்டது. குறைந்தபட்சமாக ₹1,000 முதலீடு செய்யலாம், இது வருமான வரி சட்டத்தின் கீழ் (Section 80C) வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
- அஞ்சலக 5 ஆண்டு கால வைப்பு (Post Office Time Deposit)
வங்கியின் FD போலவே செயல்படும் இந்த அஞ்சலக வைப்பு திட்டம், 5 ஆண்டுகள் காலத்திற்கு சுமார் 7.5% வட்டி வழங்குகிறது. மேலும் பழைய வரி முறையின் கீழ் வரிச் சலுகைகளையும் பெற முடியும். risk இல்லாமல் steady return விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வு.
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
நீண்டகால முதலீட்டுக்கும் ஓய்வூதிய திட்டமிடலுக்கும் மிகவும் பிரபலமான திட்டமாக PPF உள்ளது. தற்போது சுமார் 7.1% வட்டி வழங்கும் இது, 15 ஆண்டுகள் காலம் கொண்டது. முதலீடு, வட்டி, மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிற்கும் முழுமையான வரிவிலக்கு (EEE) கிடைப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
வட்டி விகிதங்கள் மாறக்கூடியவை. முதலீடு செய்வதற்கு முன் தற்போதைய வட்டி விகிதங்களை மீண்டும் சரிபார்க்கவும்.