நாம் Mutual Fund-ல் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் மிக முக்கியமான ஒன்று தான் நம்முடைய financial goal என்ன என்பதைக் தெளிவாக புரிந்து கொள்வது. எல்லாருக்கும் ஒரே மாதிரி mutual fund சரியாக இருக்காது. அதனால் தான் short term goals மற்றும் long term goals என்பதற்கேற்ப Mutual fund தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
Short term goals (1 முதல் 3 ஆண்டுகள் வரை) என்றால் — Emergency fund, Travel plan, போன்ற தேவைகள் இதில் வரும். இந்த மாதிரி goals க்கு அதிக risk எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால் Debt funds அல்லது low-risk hybrid funds போன்றவற்றை தேர்வு செய்வது நல்லது. இவை Comparatively நிலையான வருமானம் கொடுக்கும், சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.
Long term goals (5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்) என்றால் — retirement planning, குழந்தைகளின் கல்வி, wealth creation போன்றவை. இந்த goals க்கு equity mutual funds மிகவும் பொருத்தமானவை. Long term ல market fluctuations இருந்தாலும், equity funds நல்ல returns generate செய்யும் potential அதிகம். அதனால் patience மற்றும் discipline மிகவும் முக்கியம்.
இங்கே முக்கியமான விஷயம் என்னனா, mutual fund தேர்வு செய்வது மட்டும் போதாது — அதை சரியான financial goal க்கு ஏற்ப align பண்ணணும். அதற்காக ஒரு mutual fund distributor உதவி எடுத்துக்கொள்வது நல்லது. அவர்கள் உங்கள் risk profile, Income, goals எல்லாத்தையும் analyze பண்ணி சரியான fund suggest பண்ணுவாங்க.
முடிவாக சொல்லணும்னா, “ஒரு நல்ல mutual fund” என்பதைக் காட்டிலும் “உங்களுக்கு பொருத்தமான mutual fund” தான் முக்கியம். உங்கள் goals தெளிவாக இருந்தால், wealth creation journey இன்னும் easy ஆகும்.